பலன்: திருமணம் இனிதே நடந்தேறும்
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாச்சலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
பொருள்:
கயிலயம் பதியாம் சிவபெருமானுக்கு, இமவான் அன்று தன் மகளை மணமுடித்து வைத்தான். கடம்ப வனத்தில் இருக்கும் குயில் போன்றவள் நம் அன்னை. அழகிய மயில் போல இமயத்தில் இருப்பவள். உதிக்கும் சூரியனாய், வன வெளியில் திகழ்பவள். அழகிய தாமரையில் வீற்றிருக்கும், அன்னப்பறவையினை ஒத்தவள்.
கடம்பவனம் - மதுரை. மதுரையில் மீனாக்ஷி, குயில் போன்றவள். சங்கீதத்திற்கு அதிபதி. குயில் அழகாக கூவும். இனிய குரல் உடையது. அதனால் மதுரையில் அன்னை குயிலாக வீற்றிருக்கிறாள் என்று சொல்வதுண்டு.
மயில் நாட்டியத்திற்கு பெயர் பெற்றது. இமய மலையில் நடன சபேசனுடன், நடனம் புரியும் மயிலாக அன்னை இருக்கிறாள்.
விசும்பு - ஆகாயம். சிதம்பரம் ஆகாய ஸ்தலம். பொன்னம்பலம் என்று பெயர் அவ்வூரிற்கு. அங்கு ஞான ஒளி வீசும் சூரியனாக சிவகாமசுந்தரி இருக்கிறாள்.
கமலத்தில் - கமலாலயம் - திருவாரூரில், கமலாம்பாள் அன்னம் வடிவில் வீற்றிருக்கிறாள்.
பாடல் (ராகம்: திலங், தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment