Friday 11 December 2015

பாடல் - 98

பலன்: வஞ்சகரின் செயலிலிருந்து விடுபடுவோம்

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலைவந்த ஆறும், கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மாடப் பூங்குயிலே

பொருள்:

அன்னை அபிராமி, மாடத்தில் வீற்றிருக்கும் பூங்குயில். அவள் உண்மை நிறைந்த நெஞ்சில் இருப்பாள். பொய்கள் நிரம்பிய வஞ்சகரின் நெஞ்சில் ஒருகாலும் நிறைய மாட்டாள். அந்த வஞ்சகம் நிறைந்த இடத்தில் புகுதல் அவள் அறியாததொன்று.

இப்படிப்பட்ட சத்யஸ்வரூபிணியாம் நம் அன்னயின் பாத கமலங்களை தன் தலையில் சிவபெருமான் (சங்கரர்) சூடியுள்ளார். அதன் மகிமையினால், தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை, எளிதில் கையில் ஏந்தினார். பகீரதனின் முயற்சியால், ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையினையும் தன் தலையில் சூடிக்கொண்டார். நீர், நெருப்பு இவ்விரண்டின் தாக்கமும் அன்னையின் அருளால், மறைந்து விட்டன.

பாடல் (ராகம்: துர்கா , தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

No comments:

Post a Comment