பலன்: இறக்கும் தருவாயிலும் நல்ல நினைவிருக்கும்
இழைக்கும் வினைவழியே, அடும்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது அஞ்சல் என்பாய், அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களப குவிமுலை யாமளை கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
பொருள்:
அத்தர் - சிவபெருமான்
சிவபெருமானின் சித்தம் அனைத்தையும் தன்வயத்தில் வைத்திருக்கும், சந்தனக் குவியல் போன்ற முலைகளை கொண்டிருக்கும் அழகிய இளைய பெண்ணே, நான் செய்த தீவினையால், என் இறுதி காலத்தில், கொடிய எமன் என்னை துன்புறுத்தும் போது, எனக்கு அச்சம் உண்டாகும் போது, அன்னையான உன்னை அழைப்பேன். அப்போது, நீ "அஞ்சேல்" என்று ஓடிவந்து அருள் செய்வாய்.
பாடல் (ராகம் - சிவரஞ்சனி, தாளம் - ஆதி) கேட்க:
No comments:
Post a Comment