பலன்: தொடரும் துன்பம் நீங்கும்
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே, உனக்கு? இனி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே, பல உருவே, அருவே என் உமையவளே.
பொருள்:
அன்னையே, என்னை அன்றொரு நாளே, நான் பாவங்கள் செய்வதற்கு முன்பே, தடுத்து ஆட்கொண்டாய். அவ்வாறு செய்யவில்லை என்றால் அது உனக்கு நல்லதாகாது. ஏனென்றால், கருணையே உருவான உமையவள் நீ. இனி நான் என்ன செய்தாலும் சரி, பாவங்கள் செய்து நடுக்கடலில் வீழ்ந்தாலும், என்னை கரை எற்ற வேண்டியது உன் திருவுள்ளத்தின் பொறுப்பு. ஒரு உருவமாகவும், பல உருவமாகவும், உருவமே இல்லாமலும் காட்சி அளிக்கும் அன்னையே என்னை காத்தருள்வாயாக.
பாடல் (ராகம்: சுத்த பங்களா, தாளம்: மிஸ்ர சாபு) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment