பலன்: மறுபிறவியில் இன்பம் அளிக்கும்
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்கு
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
பொருள்:
அன்னை அபிராமி, அவள் மறுபாகமான சிவ பெருமான், இருவரும் ஒரே உருவில், அர்த்தநாரீஸ்வர ரூபம் கொண்டு என் முன் வந்து, என்னை தங்களுக்கு தொண்டு செய்ய வைத்தார்கள். இதுவே பெரும் பாக்கியம். இதற்கு மேல் எனக்கு எண்ண வேறொன்றுமில்லை. நான் வணங்கும் தெய்வம் அன்னை அபிராமி. என் சமையம் சாக்தம் (சக்தி வழிபாடு, அம்பாள் உபாசனை).
எனக்கு வேறு தாயும் இல்லை அன்னை உன்னை தவிர. இவ்வாறு எண்ணுவதால் மூங்கில் நிற தோளுடைய மற்ற பெண்கள் மேலும் எனக்கு ஆசை இல்லாமல் போய்விட்டது.
அன்னையை தொழுதால் முக்தி கிடைக்கும். மறுபிறவி கிடையாது. எனினும் பலனில் மறுபிறவியில் இன்பம் அளிக்கும் என்று உள்ளது. இதற்கு காரணம், மறுபிறவியே கிடையாது என்பதே பேரின்பம் இன்பம் தான்.
பாடல் (ராகம்: ஹமீர்கல்யாணி, தாளம்: --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment