பலன்: பேரின்பம் அளிக்கும்
வெளிநின்ற நின் திருமேனியை பார்த்து, என் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை, கருத்தின் உள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுள்ளமோ ,
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
பொருள்:
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - ஒளி நிறைந்த ஸ்ரீ சக்ரம் (மேரு என்று சொல்லப்படும் வடிவம் (3 Dimension ) ஒன்பது நிலைகள் (படிகள்) கொண்டது. அதனை மேலிருந்து பார்க்கும்போது (Top view ) நமக்கு கிடைக்கக்கூடிய வடிவம் ஸ்ரீ சக்ரம் (2 dimension )). அந்த மேருவின் மேல் (ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில்) உள்ள பிந்து மண்டலத்தில் இருக்கக்கூடியவளே, முந்திய பாடலில் சொல்லப்பட்ட உனது மூன்று கோலங்களை (திருமண, அர்த்தநாரீஸ்வர, திருபாதம்) கண்டவுடன் என் மனதில் எழுந்த மகிழ்ச்சி வெள்ளமானது கரைபுரண்டு கட்டுப்பாடின்றி ஓடுகிறது. என் சிந்தையுள் ஒரு தெளிவு திகழ்கின்றது. இவை அனைத்தும் உன் திருவுள்ளத்தில் நீ நினைத்ததால் தான்.
ஸ்ரீ சக்ர நிலைகள் (ஆவரணங்கள்):
1. த்ரைலோக்ய மோகனம் (பூபுரம் (அ) சதுரஸ்ரம்) - 4 மூலை கொண்ட சதுரம்
2. ஸர்வாச பரிபூரகம் (சோடஷதளம்) - 16 இதழ்கள் கொண்ட தாமரை
3. ஸர்வ சம்க்ஷோபனம் (அஷ்டதளம்) - 8 இதழ்கள் கொண்ட தாமரை
4. ஸர்வ சௌபாக்யதாயகம் (சதுர்தசாரம்) - 14 முக்கோணங்கள்
5. ஸர்வார்த்த சாதகம் (பஹிர் தசாரம்) - 10 வெளி முக்கோணங்கள்
6. ஸர்வ ரக்ஷாகரம் (அந்தர் தசாரம்) - 10 உள் முக்கோணங்கள்
7. ஸர்வ ரோகஹரம் (அஷ்ட கோணம்) - 8 முக்கோணங்கள்
8. ஸர்வ சித்தி ப்ரதாயகம் (த்ரிகோணம்) - 1 முக்கோணம்
9. ஸர்வானந்தமயம் - பிந்து - 1 புள்ளி
பாடல் (ராகம் - நாககாந்தாரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment