பலன்: கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பைரவியே
பொருள்:
5 பாணங்கள் (அம்புகள்) கொண்ட பைரவியே, அன்னை அபிராமியே, உனது வடிவங்கள் அனைத்தையும் என் மனத்தில் குறித்துக்கொண்டேன். அதனால், எனக்கு கிடைத்த உன் அருளின் துணைக்கொண்டு, யமன் (மறலி) வரும் வழி என்னவென்று கண்டுகொண்டேன். அதுமட்டும் அல்ல, அவ்வழியினை அடைத்தும் விட்டேன்.
வண்டுகள் மொய்க்கும் (வண்டு கிண்டி), தேன் நிரம்பிய (வெறித் தேன்), இனிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் (அவிழ் கொன்றை வேணி பிரான்), உடலில் ஒரு பகுதியை (ஒரு கூற்றை), தனதாக்கிக்கொண்ட தாயே!
என்று உள்ளம் உருக அபிராமி பட்டர் பாடுகிறார். நாமும் சிவ-வாம-பாக-விஹாரிணி யான அம்பாளை பாடுவோம்.
பாடல் (ராகம் - கௌளிபந்து, தாளம்-ஆதி) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment