பலன்: பக்தி பெருகும்
வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டு கொண்டேன், நின் புகழ்ச்சி அன்றி
பேணேன், ஒரு பொழுதும் திருமேனி பிரகாசம் அன்றி
காணேன் இருநிலமும், திசை நான்கும் ககனமுமே
பொருள்:
வீணாக பலி கொடுத்து வழிபடும் சமயங்கள் பக்கம் சென்று அத்தெய்வங்களை ஆராதிக்க மாட்டேன். அன்னையான உன்னிடம் மட்டுமே அன்பு கொள்வேன். உன் புகழை அன்றி வேறு புகழை பேச மாட்டேன். எப்பொழுதும்அன்னையின்
திருமேனி பிரகாசத்தை அன்றி மற்றொன்றினை காண மாட்டேன். எங்கிருந்தாலும், இவ்வுலகிலும், வேறுலகிலும் (இம்மை மறுமை இவற்றில் என்று பொருள் கொள்ள வேண்டும்), நான்கு திசைகளில் எங்கு இருந்தாலும் மற்றும் வானில் இருந்தாலும் - எங்கும் எப்போதும் அன்னையின் புகழையே பாடுவேன் என்கிறார் பட்டர்.
பாடல் (ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment