பலன்: மன அமைதி கிட்டும்
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புய முலைத் தையல், நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே
பொருள்:
- காலையில் மலரும் இளஞ்சிவப்பு நிற தாமரையிலும் (அருண அம்புயம் (அம்புஜம் திரிதல் அம்புயம்), என் மனத்தாமரையிலும் வீற்றிருப்பவள் அன்னை அபிராமி.
- அவள் தாமரை மொட்டு போன்ற குவிந்த முலைகளை உடையவள். என்றும் இளம் பெண்ணாக காட்சி தருபவள் (தையல்). [பாலாம்பிகை (அ) தையல்நாயகி என்று வைத்தீஸ்வரன் கோவிலில் அம்பாளுக்கு பெயர்].
- மிகவும் நல்லவள்.
- அன்னையின் பெருமை வாய்ந்த, கருணை ததும்பும் கண்களாகிய தாமரைகள், முகமாகிய தாமரை, கரங்களாகிய தாமரைகள், திருவடிகளான தாமரைகள் இவற்றை தவிர வேறொரு தஞ்சம் தனக்கில்லை என்று பட்டர் கூறுகிறார்.
பாடல்(ராகம் - மாயாமாளவகௌளை, தாளம்--விருத்தம்--) கேட்க:
No comments:
Post a Comment