பலன்: அறிவு தெளிவு கிடைக்கும்
தேறும் படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்கு
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே
பொருள்:
ஆறு சமயங்களுக்கும் தலைவி அன்னை அபிராமியே. ஆறு சமயங்கள் - ஆதி சங்கரர், வைதீக மதமான சனாதன தர்மத்தினை ப்ரதான தெய்வ வழிபாடினை வைத்து வகுத்துக்கொடுத்த காணபத்யம் (கணபதி), கௌமாரம் (முருகன்), சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), சாக்தம் (அம்பாள்), சௌரம் (சூரியன்) ஆகும்.
சாக்த மதத்தின் ப்ரதான தேவதை அம்பாளாயினும், பட்டர், இங்கு அம்பாளே 6 மதங்களுக்கும் தலைவி என்று கூறுகிறார். இது அம்பாள் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டினை காட்டுகிறது.
சாமானியர்கள் முன்னேறுவதற்கு வழிகளை காட்டக்கூடியவள் அன்னையே. அவளே ஆறு மதங்களுக்கும் தலைவி. இப்படி இருக்க வேறு சமயங்களும் உண்டு என்று சில வீணர்கள் வாதம் செய்கின்றனர். இது எப்படி இருக்கு என்றால், பெரிய மலையை சிறிய தடியை வைத்துக்கொண்டு தகர்த்துவிடலாம் என்பது போல். விதண்டா வாதம் என்கிறார் பட்டர்.
வேறு சமயம் என்று பட்டர் இங்கு கூறுவது, சங்கரர்அவதரிப்பதற்கு முன், பாட்ட மதம் (பூர்வ மீமாம்சம் - குமாரில பட்டர் நிறுவியது), சாங்க்ய மதம், காபாலிக மதம் (நர பலி ப்ரதானமான மதம்) என்று பல வகை இருந்தன. அவை நம்மை பாவம் செய்ய தூண்டுபவை. அத்வைத தத்வமே சாலச்சிறந்தது என்று சங்கரர் மற்ற மதங்களை வாதம் செய்து வென்றார்.
பாடல் (ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment