Thursday 10 December 2015

பாடல் - 97

பலன்: அவரவர் துறையில் சிறந்து விளங்குவோம்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம் கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதிய முனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர், போற்றுவர் தையலையே

பொருள்:

இப்பாடலில், என்றும் இளையவள், (தையல் - சிறிய வடிவம் கொண்டவள்), பாலா என்ற நாமம் கொண்டவளான அன்னை அபிராமியை, போற்றித் துதித்து, புண்ணியம் பெற்று, சாதனைகள் பல செய்து பெருமை பெற்றவர்கள் பலர் உள்ளனர் என்று பட்டர் பெருமைப்பட பாடுகிறார்/. எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிடுவது இவர்களை:

1. ஆதித்தன் - சூர்யன்
2. அம்புலி - நிலா, சந்திரன்
3. அங்கி - அக்னி தேவன்
4. குபேரன் - செல்வத்திற்கு அதிபதி
5. அமரர் தம் கோன் - தேவர்களின் தலைவன், இந்திரன்
6. போதிற் பிரமன் - தாமரையில் உதித்த பிரம்மா
7. முராரி - முரன் என்ற அசுரனை வென்ற திருமால்
8. புராரி - அசுரர்களின் திரிபுரத்தை எரித்த சிவ பெருமான்
9. பொதிய முனி - பொதிகை மலையில் வசிக்கும் அகஸ்தியர்
10. காதிப் பொருபடைக் கந்தன் - அசுரர்களை எதிர்த்து பெரும் போர் புரிந்த முருகப்பெருமான்
11. கணபதி - விநாயகர்
12. காமன் - சிவனால் எரிக்கப்பட்டு, அன்னையின் அருளால், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் மன்மதன்

இந்த 12 பேர்களும், மிக முக்கியமான ஸ்ரீ வித்யா உபாசகர்கள் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

இவர்களை போல் நாமும் அன்னையை வணங்கி, பல நன்மைகளைப் பெறுவோம்.

பாடல் (ராகம்: செஞ்சுருட்டி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment