பலன்: தீர்க்க சுமங்கலியாக பெண்கள் விளங்குவார்கள்
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப, அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வைரக் குழையும், விழியன் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே
பொருள்:
சிவந்த மாணிக்கங்கள் (செப்பும்) நிறைந்த பொன்னால் (கனக) ஆன குன்று (கலசம்) போல் விளங்கும் அபிராமி அன்னையின் திருமுலைகளின் மேல், வாசனை நிறைந்த சந்தனம் (களப) பூசப்பட்டுள்ளது. அந்த திருமார்பில் பல அணிகலன்கள் திரளாக சூடப்பட்டுள்ளன. முத்து கொப்பும், வைரத் தோடும் (குழை - தோடு) அணிந்துள்ளாள் நம் அன்னை. அன்னையின் கடைக்கண் பார்வையும் அவளுக்கு ஒரு அணிகலனாக உள்ளது. அன்னையின் திருமுகமோ, குளிர்ச்சியினை உமிழும் பூர்ண சந்திரன் போல் உள்ளது.இவற்றை நம் மனக்கண்களில் இருத்தி நினைத்தால், நமக்கு எப்போதும் அன்னை துணையாக இருப்பாள்.
பாடல் (ராகம் - ரவி சந்திரிகா, தாளம் - ஆதி) கேட்க:
Check this out on Chirbit
இப்பாடல் அபிராமி பட்டர் பாடிய பின், அடுத்து வரும் பாட்டின் போது அன்னையின் தரிசனம் கிடைத்தது. விரைவில் அடுத்த பாடலினை அனுபவிப்போம்.

No comments:
Post a Comment