பலன்: பகையுணர்வு அழியும்
தோத்திரம் செய்து தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர், வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம் குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாய் நிற்பார், பாரெங்குமே
பொருள்:
அன்னை அபிராமியை தொழுது, அவள் புகழ் பாடாது, ஒரு மாத்திரைப் பொழுது கூட அவளின் மின்னல் போன்ற பிரகாசமான தோற்றத்தை மனதில் நினைக்காதவர் அடையும் கதி என்ன?
1. வள்ளல் குணம் - வண்மை
2. குலம் - பிள்ளைகள்
3. கோத்திரம் - சந்ததி
4. கல்வி - அறிவு
5. குணம் - நற்குணங்கள்
ஆகியவற்றில் குறைவடைந்து, பாரெங்கும் திரிந்து வீடு வீடாக சென்று பாத்திரம் ஏந்தி பிச்சை எடுப்பார். தரித்ரத்தினால் பீடிக்கப்பட்டு துன்புறுவர்.
இந்த குணங்களுக்கு ஏற்றாற்போல், லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்கள்:
குலம், கோத்திரம் - குலயோகினி, குல ரூபிணி, குலாங்கனா
கல்வி - ப்ரக்ஞான கணரூபிணி, ஞான விக்ரஹா, ஞான சக்தி, சிவ ஞான ப்ரதாயினி, சத்ய ஞான ஆனந்த ரூபா, விக்ஞான கலனா, ஞான முத்ரா, ஞான கம்யா, ஞானக்ஞேய ஸ்வரூபிணி,
குணம் - ஷாட்குண்ய பரிபூரிதா, குண நிதி, த்ரிகுணாத்மிகா
பாடல் (ராகம்-ஹம்சநாதம், தாளம் - ஆதி) கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment