பலன்: பூர்வ புண்ணியத்தின் பலன் கிடைக்கும்
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ - முன் செய் புண்ணியமே
பொருள்:

- வாள் போன்று - மின்னும் நெற்றியை உடையவள் அன்னை அபிராமி.
- தேவர்களுக்கு, அன்னையான அவளை வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணக்கூடியவள்.
- அறியாமை உள்ள நெஞ்சத்திற்கு புலப்படாதவள்.
- என்றும் கன்னியானவள்.
இப்படிப்பட்டவளை நான் வணங்குவதே பூர்வஜன்மத்தில் நான் செய்த புண்ணியம் என்கிறார் பட்டர்.
சௌந்தர்ய லஹரி "சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி..." என்கிற முதல் ஸ்லோகத்தில், ஆதி சங்கரர்,
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவோ நகலு குசல ஸ்பந்திதும் அபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: ப்ரபவதி
என்கிறார்.
என்கிறார்.
அதாவது புண்ணியம் செய்யாதவர்கள் உன்னை வணங்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் பூர்வத்தில் புண்ணியம் செய்ததால் தான் உன்னை (தேவியை) வணங்குகிறார்கள்.
பாடல் (ராகம் - குறிஞ்சி, தாளம் - --- விருத்தம்---) கேட்க:
No comments:
Post a Comment